தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்ய தமிழகம் திட்டம்

தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்ய தமிழகம் திட்டம்

தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்ய தமிழகம் திட்டம்


UPDATED : அக் 30, 2026 05:12 PM

ADDED : அக் 30, 2026 05:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 05:12 PM ADDED : அக் 30, 2026 05:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதிய தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெற்று ஏற்றுமதி செய்ய தமிழகம் திட்டம்

தமிழக பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்தும் இலக்கின் ஒரு பகுதியாக, நடப்பு நிதியாண்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 50 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. இதில், அனிமேஷன், வி.எப்.எக்ஸ்., கேமிங், காமிக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய ஏ.வி.ஜி.சி., துறை முக்கிய பங்காற்றும் என, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை அமைச்சர் ஆர்.குமார் தெரிவித்துள்ளார்.

இலக்கு:



* சர்வதேச கேமிங் நிறுவனங்கள், ஏ.ஐ., நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்ப்பதுடன், உள்நாட்டிலேயே தொழில்நுட்பங்களை உருவாக்கி, காப்புரிமை பெற்று ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

* சென்னையை மட்டுமே சார்ந்திருக்காமல், கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள உற்பத்தி, ஆட்டோமொபைல் மற்றும் ஐ.டி., சேவை நிறுவனங்களுடன் இத்துறையை இணைத்து வளர்ச்சியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பயன்கள்:



* ஏ.ஐ., சார்ந்த கேமிங், மெய்நிகர் தயாரிப்பு தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது.

* தானியங்கி தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரிப்பதால், பொறியாளர்கள் புதிய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.

* இந்த வாய்ப்புகளை பயன்படுத்த, பணியாளர்களின் திறன் மேம்பாடு, முதலீடு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு அவசியமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us