தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/டெக் டூ பிஸ் (Tag) காய்கறிகள், பழங்களை உலர்த்தி பதப்படுத்தும் தொழில்நுட்பம்

டெக் டூ பிஸ் (Tag) காய்கறிகள், பழங்களை உலர்த்தி பதப்படுத்தும் தொழில்நுட்பம்

டெக் டூ பிஸ் (Tag) காய்கறிகள், பழங்களை உலர்த்தி பதப்படுத்தும் தொழில்நுட்பம்


UPDATED : நவ 26, 2026 05:22 PM

ADDED : நவ 26, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 05:22 PM ADDED : நவ 26, 2026 05:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காய்கறிகள், பழங்களை உலர்த்தி, நீண்ட நாட்கள் சேமிக்கக்கூடிய உணவு பொருட்களாக மாற்றும் தொழில்நுட்பத்தை மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை சிறு தொழில் நிறுவனங்கள் உரிமம் பெற்று, வணிக ரீதியில் பயன்படுத்தலாம்.

என்ன தொழில்நுட்பம்?

காய்கறிகள், பழங்களில் உள்ள ஈரப்பதத்தை இயந்திரங்களின் உதவியுடன் குறைத்து, நீண்ட நாட்கள் கெடாமல் சேமிக்கக்கூடிய உணவு பொருட்களாக மாற்றும் தொழில்நுட்பம்.

என்னென்ன தயாரிக்கலாம்?

வெங்காயம், உருளைக்கிழங்கு, பட்டாணி, பச்சை மிளகாய், வாழைப்பழம், திராட்சை உள்ளிட்டவற்றை உலர்த்தி உணவு பொருட்களாக தயாரிக்கலாம்.

எதற்கு பயன்படுத்தலாம்?

சூப், நூடுல்ஸ், மசாலா கலவைகள், ஊறுகாய், உடனடி உணவு தயாரிப்புகளில் பயன்படுத்தலாம். உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும், ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புள்ளது.

யாருக்கு பயன்படும்?

உணவு பதப்படுத்தும் சிறு தொழில்கள், மசாலா தயாரிப்பு நிறுவனங்கள், உணவு பொருள் ஏற்றுமதியாளர்கள்.

தொழில்நுட்பம் எங்கு கிடைக்கும்?

மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்திடம் வணிக பயன்பாட்டுக்கான உரிமம் பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு: cftri.res.in


இப்போது உரிமம் பெறுவதற்காக பட்டியலிடப்பட்டு உள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us