தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/டெக் மஹிந்திரா பெகட்ரான் ஒப்பந்தம்

டெக் மஹிந்திரா பெகட்ரான் ஒப்பந்தம்

டெக் மஹிந்திரா பெகட்ரான் ஒப்பந்தம்


ADDED : பிப் 29, 2024 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 01:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:தொழில் நிறுவனங்களுக்கான 5ஜி தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் வகையில், இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனை சேவை நிறுவனமான 'டெக் மஹிந்திரா மற்றும் பெகட்ரான்' இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம், பார்சிலோனாவில் நடந்து வரும் 'மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2024' மாநாட்டில் கையெழுத்தானது.

இது குறித்து கூட்டறிக்கை யில் தெரிவித்திருப்பதாவது:

பல்வேறு தொழில்களில் 5ஜி வாயிலாக, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் மற்றும் எட்ஜ் கம்ப்யூட்டிங் ஆகியவற்றை விரைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பேரிடர் காலங்களிலும், தொலைதுார பகுதிகளிலும் தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதிலும், டிஜிட்டல் பின்னடைவுகளை மேம்படுத்துவதிலும் இரு நிறுவனங்களும் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us