தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 'ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வெற்றிக்கு தொழில்நுட்ப யோசனைகள் மட்டுமே போதாது'

 'ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வெற்றிக்கு தொழில்நுட்ப யோசனைகள் மட்டுமே போதாது'

 'ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வெற்றிக்கு தொழில்நுட்ப யோசனைகள் மட்டுமே போதாது'


ADDED : நவ 30, 2025 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 02:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:'ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்க, தொழில் நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் அவசியம்' என, சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்கா முன்னாள் தலைவர் அசோக் ஜுன்ஜுன்வாலா தெரிவித்தார்.

பி.ஏ.எல்.எஸ்., எனும், ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில், சென்னை ஐ.ஐ.டி.,யில் தொழில்முனைவோர் மேம்பாடு குறித்த மாநாடு நேற்று நடந்தது. இதில், இன்ஜி., கல்லுாரி பேராசிரியர்கள், கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டுவதற்காக, ஐ.ஐ.டி மற்றும் அண்ணா இன்குபேட்டர் ஆகியவற்றுடன், பி.ஏ.எல்.எஸ்., புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. மாநாட்டில், சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்காவின் முன்னாள் தலைவர் அசோக் ஜுன்ஜுன்வாலா பேசியதாவது:

ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வெற்றிக்கு, தொழில்நுட்ப யோசனைகள் மட்டும் போதாது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் அவசியம்.

மழை வெள்ளம் மற்றும் போக்குவரத்து ஆகியவை தற்போது மிகப்பெரிய பிரச்னைகளாக உள்ளன. இதற்கு, தீர்வு காணும் வகையில் புதிய திட்டமிடல்கள் அவசியம். அதுவே புதுமைக்கு வழிவகுக்கும்.

எங்கள் நிறுவனம் போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண, புதிய திட்டங்களை வடிவமைத்து வருகிறது. ஸ்டார்ட் அப் அனைத்து மாணவர்களுக்கும் ஏற்றதாக இருக்காது.

குடும்ப சூழல் மற்றும் கல்லுாரி வேலை வாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஸ்டார்ட் அப் துவங்கும் எண்ணம் வேண்டாம். ஏனெனில், அது அவர்கள் வாழ்வில் பேரிடராக மாறிவிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us