ADDED : ஜூலை 18, 2025 01:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக, சென்னை அண்ணா பல்கலையில் தமிழ்நாடு தொழில்நுட்ப பரிமாற்ற மையம் துவங்கப்பட்டுள்ளது.
டி.என்.டி.டி.எப்.சி., எனப்படும் இந்த மையத்தை, மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார்.
இந்த மையம், அண்ணா பல்கலையின் தமிழ்நாடு டெக்னாலஜி கூடத்தில் அமைந்துள்ளது.
தமிழக அரசின் நிதி உதவியோடு துவங்கப்பட்டுள்ள இந்த மையம், கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும், ஸ்டார்ட் அப் மற்றும் தொழில் நிறுவனங்களுக்குமான இடைவெளியை குறைக்க, மாநில அளவில் திறன் வாய்ந்த அதி நவீன தொழில்நுட்ப பரிமாற்ற கூடங்கள் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.