உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 28, 2026 11:30 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: விதைப்பு காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, மத்திய அரசு 17 லட்சம் டன் யூரியா கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது.
இதுகுறித்து ஏல ஆவணத்தில் கூறியுள்ளதாவது:
தற்போதைய விதைப்பு பருவத்துக்கு முன்பாகவே 17லட்சம் டன் யூரியா கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
தற்போதைய ஏலத்தின்படி இறக்குமதி செய்யப்படும் யூரியா, ஜூலை 20ல் சம்பந்தப்பட்ட துறைமுகங்களிலிருந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன், ஏப்ரல் தொடக்கத்தில் 25 லட்சம் டன் யூரியாவுக்கான டெண்டர் கோரப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
