ADDED : ஜூன் 02, 2026 06:59 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: சர்வதேச சந்தையில் யூரியா விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், 17 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்ய இரண்டாவது டெண்டரை மத்திய உர அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
உர அமைச்சக அதிகாரி தெரிவித்ததாவது: மேற்காசிய போர் தொடங்கிய பின், 25 லட்சம் டன் யூரியா மற்றும் 50 லட்சம் டன் டி.ஏ.பி., உரங்களை இறக்குமதி செய்ய ஆர்டர் போடப்பட்டது. அவை, ஜூன் - ஜூலை மாதங்களில் வந்தடையும். இந்நிலையில், கரீப் பருவத்துக்கான 17 லட்சம் டன் யூரியாவை இறக்குமதி செய்ய சர்வதேச டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
