ADDED : நவ 13, 2025 11:54 PM

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட 111 நாடுகளுக்கான இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய ஜவுளி பொருட்களுக்கு முக்கிய சந்தையாக அமெரிக்கா விளங்கி வருகிறது. ஆனால் வரி விதிப்பு காரணமாக அந்நாட்டுக்கான ஜவுளி ஏற்றுமதி குறைந்துள்ளது. இந்நிலையில், நாட்டின் ஏற்றுமதி சந்தை பல்வகைப்படுத்தப்பட்டுள்ளதை இந்த வளர்ச்சி உணர்த்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், கடந்த ஏப்ரல் - செப்டம்பர் காலகட்டத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதி 0.10 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி (111 நாடுகளுக்கு)
காலகட்டம் ஏற்றுமதி மதிப்பு (ரூ. கோடியில்)
ஏப்ரல் - செப்டம்பர் 2024 67,924
ஏப்ரல் - செப்டம்பர் 2025 74,704
வளர்ச்சி 10 %
முக்கிய சந்தைகளுக்கான ஏற்றுமதி வளர்ச்சி (%)
ஜப்பான் 19.00
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 14.50
பிரான்ஸ் 9.20
ஸ்பெயின் 9.00
ஜெர்மனி 2.90
பிரிட்டன் 1.50

