ADDED : ஜன 01, 2025 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பொருளாதாரம் வரும் நாட்களில் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பக் கூடும். நடப்பாண்டு குறித்த நுகர்வோர் மற்றும் நிறுவனங்களின் நம்பிக்கை வலுவாக உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் வலுவான லாபத்துடன் புதிய ஆண்டை துவங்குவதால், முதலீட்டு கண்ணோட்டமும் சிறப்பாகவே உள்ளது.
பணவீக்கம் குறைந்து வருவது சாதகமான அம்சம். புவிசார் அரசியல் பதற்றங்கள், பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள், மோசமான இயற்கை பேரிடர்கள் மற்றும் அதிகரித்து வரும் உலகளவிலான கடன் ஆகியவை குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

