உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 10, 2025 12:15 AM

அ நிறம் | அளவு
அமெரிக்க பொருட்கள் இறக்குமதிக்கு சீனா 50 சதவீத வரி விதித்த நிலையில், 27 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ஐரோப்பிய யூனியனும் வரி விதித்துள்ளது.
ஸ்டீல், அலுமினியப் பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதித்த நிலையில், அதே பொருட்களை ஐரோப்பிய யூனியன் நாடுகள் இறக்குமதி செய்யும்போது, அமெரிக்காவுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வரை (23 பில்லியன் டாலர்) வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனும் அமெரிக்கா மீது பதிலுக்கு வரி விதித்துள்ளதால், வர்த்தகப் போர் மேலும் தீவிரமடையும் எனத் தெரிகிறது.
