உள்ளடக்கத்திற்கு செல்ல

அறிவோம் இயந்திரம் (Tag) மின்சார கோளாறுகளை குறைக்கும் ‘ஹார்மானிக் பில்டர்’
அறிவோம் இயந்திரம் (Tag) மின்சார கோளாறுகளை குறைக்கும் ‘ஹார்மானிக் பில்டர்’
UPDATED : நவ 26, 2026 06:30 PM
ADDED : நவ 26, 2026 06:30 PM

அ நிறம் | அளவு
தொழிற்சாலைகளில் மின்சார கோளாறுகளை குறைக்க பயன்படும் 'ஹார்மானிக் பில்டர்' சாதனம், மத்திய சிறு, குறு தொழில் துறையின் 'எம்.எஸ்.இ., கிப்ட்' தொழில்நுட்ப பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
என்ன சாதனம்?
மின்சாரத்தில் ஏற்படும் 'ஹார்மானிக் டிஸ்டார்ஷன்' பிரச்னையை குறைத்து, மின் சாதனங்கள் சீராக இயங்க உதவும் சாதனம்.
எப்படி செயல்படுகிறது?
வி.எப்.டி., வெல்டிங் மெஷின் உள்ளிட்ட கருவிகளால் மின்சாரத்தில் ஏற்படும் தேவையற்ற மாற்றங்களை ஹார்மானிக் பில்டர் குறைக்கிறது.
என்ன பயன்?
மோட்டார், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட சாதனங்கள் அதிக வெப்பமடைவதையும், மின்சார இழப்பையும் குறைக்க உதவும்.
யாருக்கு பயன்படும்?
ஜவுளி, இன்ஜினியரிங், வெல்டிங் தொழிற்சாலைகள் மற்றும் வி.எப்.டி., பயன்படுத்தும் சிறு தொழில்கள்.
