உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 01, 2026 04:13 AM

அ நிறம் | அளவு
சென்னை:சென்னையைச் சேர்ந்த 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனமான, 'தி இண்டஸ் வேலி' நச்சு பொருட்கள் இல்லாத சமையல் பாத்திரங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் தயாரிப்புகள், நம் நாட்டில் விற்பதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தற்போது இந்நிறுவனம் 161 கோடி ரூபாய் நிதியை, 'கஜா கேபிடல்' நிறுவனத்திடம் இருந்து திரட்டியுள்ளது.
