ADDED : ஜன 10, 2025 02:09 AM

2,100 சதவீதம்
நுண் கடன் பிரிவில் இயங்கி வரும் குறு நிதி நிறுவனங்களின் வணிகம், கடந்த 12 ஆண்டுகளில் 2,176 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக மத்திய நிதி சேவைகள் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2011 - 12ம் நிதியாண்டில் 17,264 கோடி ரூபாயாக இருந்த இந்நிறுவனங்களின் வணிகம், கடந்தாண்டு நவம்பர் மாத நிலவரப்படி 3.93 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் 723 மாவட்டங்களில் இந்நிறுவ னங்கள் இயங்கி வருகின்றன.
52,000 பேர்
பிரதமர் மோடியால் கடந்த மாதம் 9ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட எல்.ஐ.சி.,யின் பீமா சக்தி யோஜனா திட்டத்தில், ஒரே மாதத்தில் 52,000க்கும் அதிகமான பெண்கள், பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 70 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு நிதிசார் கல்வி அறிவும், காப்பீடு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.

