ADDED : ஜன 17, 2025 11:11 PM

கடந்த மாதம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மின்னணு பொருட்களின் மதிப்பு இது. கடந்த 2023ம் ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடுகையில் இது 35.10 சதவீதம் அதிகம். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவே மின்னணு பொருட்களின் அதிகபட்ச ஏற்றுமதி. நம் நாட்டிலிருந்து அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த மின்னணு பொருட்கள், தற்போது மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளன. பொறியியல் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
கடந்த இரண்டு வாரங்களில், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் ஏற்பட்ட சரிவு இது. கடந்த ஜன., 2ம் தேதி, 82,000 கோடி ரூபாயாக இருந்த அதன் சந்தை மதிப்பு, தற்போது 50,000 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆண்டு ஒன்றுக்கு 100 சதவீதத்துக்கும் மேலான வளர்ச்சியை பதிவு செய்து வந்த நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த 11 நாட்களில் 37 சதவீதம் சரிந்துள்ளது.