ADDED : ஜூலை 26, 2025 11:41 PM

250
க டந்த 2017 - 18ம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட 2ம் கட்ட தங்க பத்திரம், நாளையுடன் முதிர்ச்சியடைவதால், இதற்கான இறுதி விலையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, முதலீட்டாளர்களுக்கு கிராமுக்கு 9,924 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. முதலீட்டாளர்கள் இதன் வாயிலாக, எட்டு ஆண்டு முதலீட்டிற்கு 251 சதவீதம் வருமானத்தை பெற இருக்கின்றனர். இரண்டாம் கட்ட தங்கப் பத்திரம் வெளியீட்டின் போது கிராம் 2,830 ரூபாயாக இருந்தது.
1,020
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு, கிளவுடு அடிப்படையிலான வீடியோ ஒளிபரப்பு மற்றும் பகிர்வு சேவைகளை அளித்து வரும் அமாஜி மீடியா லேப்ஸ், 1,020 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு விண்ணப்பித்து உள்ளது. முதலீட்டாளர்கள் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 353 கோடி ரூபாயும்,
புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 667 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது.