ADDED : ஜூலை 06, 2025 12:16 AM

59,74,000
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 41,140 கோடி ரூபாய் அதிகரித்து, 59.74 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
இதுவரை இல்லாத உச்சத்தை இது நெருங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
20
உலகம் முழுதும் உள்ள மத்திய வங்கிகளின் தங்கம் கொள்முதல், கடந்த மே மாதத்தில் 20 டன்களாக அதிகரித்துள்ளது. முந்தைய மாதமான ஏப்ரலில் இது 16 டன்னாக இருந்தது. இருப்பினும், இவை 12 மாத சராசரியான 27 டன்னை விட குறைவு என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
62,625
கடந்த 2024-25ம் நிதியாண்டில், நாட்டின் கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 62,625 கோடி ரூபாயாக இருந்தது.இது, 'பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா' திட்டத்தின் இலக்கான 1 லட்சம் கோடி ரூபாயை எட்ட வில்லை என்றும் 37,375 கோடி ரூபாய் குறைவாக ஏற்றுமதியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.