ADDED : ஜூலை 28, 2025 10:54 PM
1,40,000
டெஸ்லா மற்றும் சாம்சங் இடையே 'மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ., சிப்' தயாரிப்புக்காக 1.40 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். இந்த ஒப்பந்தம் வரும் 2033ம் ஆண்டு வரை நீ டிக்கும் என, கூறப்படுகிறது.
960
ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வாகன பிரிமீயம் வசூல், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 960 கோடி ரூபாயாக அதிகரித்துள்ள தாக, நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அனில் அகர்வால் கூறியுள்ளார்.
இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 733 கோடி ரூபாயாக இருந்தது. பொது காப்பீட்டு துறையின் சராசரி வளர்ச்சி, 9 சதவீதமாக உள்ள நிலையில், வாகன காப்பீடு வளர்ச்சி, 31 சதவீதம் உயர்ந்துள்ளது.
10.70
நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, கடந்த நிதியாண்டில் 10.70 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கியின் 'டிஜிட்டல் பேமென்ட்ஸ் குறியீடு' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு மார்ச்சில் 445.50 புள்ளிகளாக இருந்த இக்குறியீடு, கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளின் முன்னேற்றத்தின் காரணமாக, நடப்பாண்டு மார்ச்சில் 493.22 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.