தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி


ADDED : ஆக 09, 2025 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2025 11:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1.40


நடப்பு நிதியாண்டில், வங்கிகளின் கடன் வளர்ச்சி , இதுவரை 1.40 சதவீதமாக உள்ளது. இது, கடந்த நிதியாண்டில் 2.30 சதவீதமாக இருந்தது.

டிபாசிட் வளர்ச்சி விகிதம், கடந்த நிதியாண்டில் 3.50 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டில் 3.40 சதவீதமாக உள்ளதாக ரிசர்வ் வங்கியின் வாராந்திர தரவுகள் தெரிவிக்கின்றன.

0.90


அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பு காரணமாக, 2026ல் உலகளாவிய வர்த்தகம் 0.90 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடையும் என, உலக வர்த்தக அமைப்பு கணித்து உள்ளது.

அதிக வரி விதிப்பால், அடுத்தாண்டு எதிர்பார்க்கப்படும் வர்த்தக அளவு வளர்ச்சி, முன் கணிக்கப்பட்ட 2.50 சதவீதத்தில் இருந்து 1.80 சதவீதமாக குறையும் என தெரிவித்து உள்ளது.

22


காப்பீட்டு துறையின் புதிய வணிக பிரீமியம் வசூல், கடந்த ஜூலையில் 22 சதவீதம் அதிகரித்து, 38,958 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.

இது, கடந்தாண்டு இதே காலத்தில் 31,823 கோடி ரூபாயாக இருந்தது. இதில் எல்.ஐ.சி., 22,618 கோடி ரூபாயும், தனியார் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் 16,340 கோடி ரூபாயும் ஈட்டியுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us