ADDED : நவ 16, 2025 01:26 AM
15
ந டப்பாண்டு அக்டோபர் முதல் அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் வரையிலான சர்க்கரை சந்தைப்படுத்தல் ஆண்டில், 15 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய உணவுத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
சர்க்கரை ஆலைகளுக்கு இதுகுறித்து அனுப்பியுள்ள கடிதத்தில், அனைத்து ஆலைகளுக்கும் அவற்றின் முந்தைய மூன்று ஆண்டு சராசரி சர்க்கரை உற்பத்தியில் 5.29 சதவீதம் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி செய்ய விருப்பமில்லாத நிறுவனங்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சர்க்கரை ஏற்றுமதி அளவை, அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்கு முன் அரசிடம் ஒப்படைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
4,500
ரி யல் எஸ்டேட் துறையை சேர்ந்த ஆனந்த் ராஜ் நிறுவனம், ஆந்திராவில் 4,500 கோடி ரூபாய் முதலீட்டில் தரவு மையம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆனந்த் ராஜ் கிளவுட் எனும் அதன் துணை நிறுவனம், ஆந்திராவின் பொருளாதார மேம்பாட்டு வாரியத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சமீபத்தில் திரட்டிய 1,100 கோடி ரூபாய் நிதியை இதற்கு பயன்படுத்த உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முதலீட்டின் வாயிலாக 8,500 நேரடி வேலைவாய்ப்புகளும்; 7,500 மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

