தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி


ADDED : ஜூன் 29, 2026 02:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 02:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

20,000

அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில், உத்தர பிரதேசத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனை, தற்போது உள்ள 6,000 மெகாவாட்டில் இருந்து 20,000 மெகாவாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, அந்த மாநில முதல்-வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

3,896

ஐ.டி.சி., நிறுவனத்தில் பங்கு முதலீடு செய்துள்ள, பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனத்துடன் தொடர்புடைய டொபாக்கோ மேனுபாக்சரர்ஸ் (இந்தியா) லிமிடெட் மற்றும் மைடில்டன் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி ஆகிய நிறுவனங்களுக்கு 2025 - 26 நிதியாண்டில், அந்நிறுவனம் கிட்டத்தட்ட 3,896 கோடி ரூபாய் டிவிடெண்ட் வழங்கியுள்ளது.

-----

65,000

ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் கணக்கில், இதுவரை வருவாயாக அங்கீகரிக்கப்படாத 65,000 கோடி ரூபாய் மதிப்பிலான தொகை இருப்பதாக அதன் தலைவர் இர்பான் ரசாக் தெரிவித்துள்ளார். கடந்த 3 நிதியாண்டுகளில், வீட்டு வசதி திட்டங்களின் விற்பனை வலுவாக இருந்ததன் காரணமாக இந்த அளவுக்கு அங்கீகரிக்கப்படாத வருவாய் உருவாகியுள்ளது.

425

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் பின்டெக் நிறுவனமான புரோக்பேப், தனது கடன் வழங்கும் வர்த்தக செயல்பாடுகளை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய, வரும் 2028 நிதியாண்டில் பங்கு வெளியீடு வாயிலாக 425 கோடி ரூபாய் மூலதனம் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

1,500

ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த எம்பசி குரூப், பெங்களூருவில் 30 லட்சம் சதுர அடி பரப்பளவில் அதிநவீன ஐ.டி., மற்றும் கார்ப்பரேட் அலுவலக வளாகங்களை கட்டமைப்பதற்காக 1,500 கோடி ரூபாய் புதிய முதலீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us