ADDED : ஜூலை 01, 2026 04:26 AM

27,075
அதானி விழிஞ்ஞம் துறைமுக நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்குகிறது எம்.எஸ்.சி.யின் பிரிவான டி.ஐ.எல்., இதன் ஒப்பந்த மதிப்பு ரூ.27,075 கோடி ஆகும்
13,00,000
கடந்த சில ஆண்டுகளில் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.13 லட்சம் கோடி கடன் உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. 2026 ஜூன் 9 நிலவரப்படி, 1.06 லட்சம் கடன் உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளன
42,750
முன்னணி ஐ.டி., நிறுவனங்கள், ஏ.ஐ., சைபர் கிரைம் திறன்களை மேம்படுத்த ரூ. 42,750 கோடி மதிப்பிலான நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளன
50,000
ஆண்டுக்கு 50,000 டன் காப்பர் சுத்திகரிப்பு திறன் கொண்ட ஜகாடியா திட்டத்தை முன்னெடுத்து, நவரத்னா அந்தஸ்தை பெறும் இலக்குடன் இந்துஸ்தான் காப்பர் நிறுவனம், லோஹும் மெட்டீரியல்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது
105
சுஸ்லான் எனர்ஜி நிறுவனம், சன்ஷூர் எனர்ஜி நிறுவனத்திடமிருந்து 105 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் திட்டத்தை பெற்றுள்ளது. இதை கர்நாடகாவில் அமைக்க உள்ளது.
