தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி


ADDED : ஜூலை 03, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 06:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

40

ஐரோப்பிய யூனியனின் தர அடிப்படையிலான ஸ்டீல் இறக்குமதியில் புதிய விதியால், நம் நாட்டில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல் அளவு 40 சதவீதம் குறையும் என இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

4,500



நாட்டின் மக்கள் தொடர்பு துறையின் மதிப்பு 2026ம் நிதியாண்டில் 11 சதவீதம் வளர்ந்து 3,230 கோடி ரூபாயானது. 2030ம் ஆண்டுக்குள் 4,500 கோடி ரூபாயை எட்டும் என மக்கள் தொடர்பு சங்கம் தெரிவித்துள்ளது.

2.37,500



நாட்டின் தனியார் கடன் சந்தை மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்கு வளர்ச்சி பெற்று சுமார் 2,37,500 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.

200



ஏ.சி.இ., நிறுவனம் ஜப்பானின் கட்டோ நிறுவனத்துடன் இணைந்து உயர் திறன் கிரேன் தயாரிப்பில் 200 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உலக சந்தைக்கு இந்த கிரேன்கள் அனுப்பப்படும்.

8,00,000



கடந்த செப்டம்பரில் ஜி.எஸ்.டி., கவுன்சில் அறிவித்த எளிமைபடுத்தல் முறையால், கடந்த ஆறு மாதங்களில் 8 லட்சம் ஜி.எஸ்.டி., பதிவுகள் நடந்துள்ளன. இதில் உ.பி., மாநிலம் முன்னணியில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us