ADDED : ஜூலை 05, 2026 02:08 AM

50,000
கட்டடம் கட்ட பயன்படுத்தும் டி.எம்.டி கம்பிகள் விலை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவாக ஒரு டன் 50,000 ரூபாயாக குறைந்துள்ளது. குறைவான தேவை மற்றும் அதிக இருப்பு காரணமாக விலை குறைந்துள்ளது.
5
தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை பயன்படுத்தி நிலையான உற்பத்தியை மேற்கொண்டால் உலக பொம்மை சந்தையில் நம் நாடு 5 சதவீத பங்களிப்பை அடுத்த 6 ஆண்டுகளில் வழங்க முடியும் என மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
15
நாட்டின் மிகப்பெரிய தனியார் கடனளிப்பு வங்கியான ஹெச்.டி.எப்.சி., கடந்த ஏப்., முதல் ஜூன் வரை வழங்கிய கடன் 15.40 வளர்ச்சி கண்டது. டிபாசிட் திரட்டலும் 14.70 சதவீதம் அதிகரித்தது.
50
சிறுநகரங்களுக்கான உடான் விமான திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அரசு துவங்கியுள்ள நிலையில், முதல் கட்டத்தின் 669 வழித்தடங்களில் 336 மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இது கிட்டத்தட்ட 50 சதவீதம்.
38,00,000
கடந்த ஜூன் மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கச்சா எண்ணெய் ஏற்றுமதி, தினசரி 38 லட்சம் டன் பீப்பாய் என்ற சாதனை அளவை எட்டியது. இது மே மாதத்தைவிட 10 லட்சம் பீப்பாய்களுக்கு மேல் அதிகம் என்கிறது புள்ளிவிபரம்.
