ADDED : ஜூலை 11, 2026 06:49 AM

70,000
ஜார்க்கண்டில் ஸ்டீல், அணுசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில், 70,000 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தொழிலதிபர் நவீன் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.
64,28,000
ஜூலை 3ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 69,217 கோடி ரூபாய் உயர்ந்து, 64.28 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
9
டில்லியின் கான் மார்க்கெட்டில் கடைகளுக்கான மாத வாடகை, இந்த ஆண்டுக்கான ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 9 சதவீதம் உயர்ந்துள்ளதாக குஷ்மேன் அண்டு வேக்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
3,55,000
இந்தியாவின் மின்சார வாகன உதிரிபாகங்கள் சந்தை, 2025ல் 41,000 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2032க்குள் 3.55 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, இந்திய எரிசக்தி சேமிப்பு கூட்டணி மற்றும் கஸ்டமைஸ்டு எனர்ஜி சொல்யூஷன்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
17,50,000
கர்நாடக மாநிலம், மங்களூருவில் 17.5 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட அவசரகால கச்சா எண்ணெய் சேமிப்பு மையம் அமைக்கும் திட்டத்துக்கு, முதற்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஓ.என்.ஜி.சி., தெரிவித்துள்ளது.
