ADDED : ஜூலை 25, 2026 03:27 AM

10,260
கடந்த ஜூலை 17 நிலவரப்படி, நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 10,260 கோடி ரூபாய் அதிகரித்து, 64.24 லட்சம் கோடி ரூபாய் ஆனதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
35,354
மார்ச் 31 நிலவரப்படி, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்களின் கீழ், மொத்தம் 35,354 கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
25.08
நாட்டின் உரத் தேவையை பூர்த்தி செய்ய, கடந்த ஏப்., முதல் ஜூன் வரை 25.08 லட்சம் டன் யூரியா, 7.11 லட்சம் டி.ஏ.பி., இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
18,154
கடந்த ஜூன் மாத நிலவரப்படி, நாடு முழுதும் 18,154 எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், 1.25 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
3
மேற்காசிய பதற்றத்தால் ஏற்பட்ட மூலப்பொருள் விலை உயர்வால், நடப்பு நிதியாண்டில் பாலியஸ்டர் நுால் உற்பத்தி, 3 சதவீதம் வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
