தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி


ADDED : ஆக 04, 2026 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2026 12:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

1,00,00,000



கடந்த 2025-26ல் சீனாவிலிருந்து 1 கோடி ரூபாய் மதிப்பில் ஒரேயொரு அன்னிய நேரடி முதலீட்டு விண்ணப்பம் மட்டுமே வந்துள்ளது. இதற்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

14,10,000



துருப்பிடிப்பால் ஆண்டுதோறும் நாட்டின் கட்டமைப்புகளில் 14.10 லட்சம் கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. துருப்பிடிப்பை தடுத்தால் 5 லட்சம் கோடி டாலர் மிச்சமாகும்.

2,80,000



சென்னை பெட்ரோலியம் நிறுவனம், நாளொன்றுக்கு 2,10,000 பீப்பாய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன் கொண்ட ஆலையின் திறனை 2,80,000 பீப்பாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

14,13,00,000



ரயில்வேயின் சரக்கு ஏற்றுமதி கடந்த ஜூலை மாதத்தில் 9 சதவீதம் அதிகரித்து 14.13 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இதில் நிலக்கரி, சிமென்ட், இரும்புத்தாது போக்குவரத்து அதிகரித்துள்ளது.

55,100



எஸ்ஸார் குழுமம், பிரிட்டனின் ஸ்டான்லோ உற்பத்தி மையத்தை எரிசக்தி மையமாக மாற்ற 55,100 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us