ADDED : ஆக 05, 2026 01:21 AM

400
தொலைத்தொடர்பு உபகரண நிறுவனமான ஹெச்.எப்.சி.எல்., ஆப்டிகல் பைபர் மற்றும் கேபிள் உற்பத்தி திறனை விரிவாக்க, 400 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.
9
நடப்பு நிதியாண்டில் விருந்தோம்பல் துறை, 7 - 9 சதவீதம் வரை வளர்ச்சி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சுற்றுலா மற்றும் வணிக பயணங்கள் அதிகரிப்பதே காரணம்.
36,400
எல்.ஐ.சி.,யின் 6.50 சதவீத பங்குகளை விற்பனை செய்ததில், மத்திய அரசு 36,400 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. இது, வரலாற்றில் அதிகபட்ச முதலீட்டு வரவேற்பாக இடம்பெற்றது.
5.10
வரும் 2028 - 29ம் நிதியாண்டுக்குள் நாட்டின் ஜி.டி.பி., 5.10 லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவை எட்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
3
காரீப் பருவ சாகுபடி பரப்பு 81 சதவீதம் எட்டியிருந்தாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3 சதவீதம் குறைந்து, 894 லட்சம் ஹெக்டேராக பதிவாகியுள்ளது.
