ADDED : செப் 05, 2026 06:20 AM
23
தமிழகத்தில் தஞ்சாவூர் கலைத்தட்டுகள், மயிலாடி கல்சிற்பங்கள் உள்ளிட்ட 23 கைவினை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது: கிராம தொழில் துறை அதிகாரிகள்.
37,500
நிலக்கரி எரிவாயுமயமாக்கத்தை மேம்படுத்த மத்திய அரசு அறிவித்த ரூ. 37,500 கோடி ஊக்கத்தொகை திட்டத்தில் இணைய இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை.
2,00,000
நாட்டின் புத்தக பிரசுர சந்தை ஆண்டுக்கு 11% உயர்ந்து வருவதாகவும் 2031க்குள் இதன் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடியை எட்டும் என்கிறது, நீல்சன் ஐ.க்யூ அறிக்கை.
69.93
ஆக., 28ம் தேதி நிலவரப்படி நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 1.08 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து 69.93 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது: ரிசர்வ் வங்கி
24.40
அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஜூலையில் 24.40 சதவீதம் அதிகரித்து 8.36 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக கூறுகிறது, அந்நாட்டின் ஆய்வறிக்கை.
