ADDED : செப் 06, 2026 03:25 AM

98,000இந்திய ஆட்டோ உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களிடம் 98,000 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேங்கி இருப்பதாக வெக்டர் கன்சல்டிங் அறிக்கையில் தகவல்
4,000ஜாகுவார் லேண்ட் ரோவர், பிரிட்டனில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4,000 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதிகரித்து வரும் செலவுகள், வாகன விற்பனை சரிவு மற்றும் அமெரிக்க வரிகள் இதற்கு காரணம்
552030ம் ஆண்டில், ஒரு காரின் தயாரிப்பு செலவில் எலக்ட்ரானிக்ஸ் பாகங்களின் பங்கு 55 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக பி.சி.ஜி.,- ஏ.சி.எம்.ஏ., அறிக்கை
5அதானி டிபென்ஸ் அண்டு ஏரோஸ்பேஸ் நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஏ.கே.203 ரக துப்பாக்கிகளுக்கு வெடிமருந்துகளை வினியோகிப்பதற்காக, இந்தோ - ரஷ்யன் ரைபிள்ஸ் நிறுவனத்துடன் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது
24நைகா நிறுவனம், எர்த் ரிதம் நிறுவனத்தில் கூடுதலாக 24 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இந்நிறுவனத்தில் நைகாவின் பங்கு 75.83 சதவீதமாக உயர்ந்துள்ளது.
