ADDED : அக் 03, 2026 03:27 AM

4.20
கடந்த செப்., மாதத்தில், அமெரிக்காவில் புதிதாக 29,000 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகியுள்ளன. இதனால் வேலையின்மை விகிதம் அந்நாட்டில் 4.20 சதவீதமாக உயர்ந்துள்ளது
40,000
'கோபர்தன்' திட்டத்தில், எரிவாயு உற்பத்தியை 10 மடங்கு அதிகரித்தால், எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகையில் 40,000 கோடி ரூபாய் சேமிக்கலாம் என்கிறார், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
87
தென்மேற்கு பருவமழை 87% மட்டுமே பதிவாகியுள்ளதால், வேளாண் மற்றும் அது சார்ந்த துறையின் மதிப்பீட்டை 1.3 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக 'இக்ரா' ஆய்வு நிறுவனம் குறைத்துள்ளது
1,000
பீஹார் மாநிலம், பூர்ணியாவில் உற்பத்தி செய்யப்பட்ட 1,000 கிலோ மக்கானா, கிரீஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என, 'அபெடா' தகவல்
38,000
அன்னிய செலாவணி வர்த்தகத்தில் வங்கிகளுக்கு 47,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது, அதில் 38,000 கோடி ரூபாயை வங்கிகள் மீட்டுள்ளதாக 'கிரிசில் கோலிஷன் கிரீன்விச்' ஆய்வு நிறுவனம் தகவல்.
