தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ டெக்னிக்கல் செட்- அப்பில் மாற்றம் வரவில்லை

 டெக்னிக்கல் செட்- அப்பில் மாற்றம் வரவில்லை

 டெக்னிக்கல் செட்- அப்பில் மாற்றம் வரவில்லை


ADDED : மார் 17, 2026 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 01:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 23,116.10 23,502.00 22,955.25 23,408.80

பத்து மணியளவில் ஏற்றம், பதினோரு மணியளவில் ஏறிய புள்ளிகளை விட கிட்டத்தட்ட இருமடங்கு அளவிலான இறக்கம், பின் 2 மணி வரை பெரிய மாற்றம் ஏதுமில்லை என்ற ரீதியில் நடைபெற்ற நிப்டி, அதன் பின் ஒரே பாய்ச்சலாக ஏற்றம் கண்டு, நாளின் இறுதியில் 257 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 8 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 8 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி100' குறியீடு, அதிகபட்சமாக 0.86 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு, அதிக பட்சமாக 0.61 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 8 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 11 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஆட்டோ' குறியீடு அதிகபட்சமாக 1.67 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி ஆயில் & காஸ்' குறியீடு அதிகபட்சமாக 1.58 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,372 பங்குகளில், 1,074 ஏற்றத்துடனும்; 2,212 இறக்கத்துடனும்; 86 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. கடந்த 10 வர்த்தக நாட்களில், மூன்றாவது தடவை நிப்டி ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. டெக்னிக்கல் செட் அப்பில் பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை. குறிப்பாக இந்த ஏற்றத்தினால் 'டிரெண்ட் ரிவர்சல்' என்பது உருவாகவில்லை. தற்போதைய சூழ்நிலையில் நிப்டியின் 'பியரிஷ்னெஸ்' தோற்றம் ஓரளவுக்கு மாறுவதற்கு நிப்டி 23,800-க்கு மேல் சென்று நிறைவடையவேண்டும். இதற்கு செய்திகள் மிகவும் சாதகமாக இருக்கவேண்டும். 23,000-த்துக்கு கீழே சென்றால் 22,750 வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

ஆதரவு 23,070 22,735 22,525

தடுப்பு 23,600 23,815 24,025

*****

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி50 (எண்ணிக்கை)

எட்டர்னல் 222.50 6.82

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 838.80 21.80

டாடா ஸ்டீல் 186.25 2.74

ஐ.டி.சி., 307.45 6.00

கோட்டக் மஹிந்திரா பேங்க் 369.40 2.55

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

எஸ் பேங்க் 18.51 -0.29

சுஸ்லான் எனர்ஜி 41.00 -0.41

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 62.79 0.22

என்.ஹெச்.பி.சி., 75.30 0.32

அசோக் லேலண்டு. 171.97 1.32

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

பந்தன் பேங்க் 162.17 -13.33

என்.பி.சி.சி., இந்தியா 82.89 -0.31

ஐநாக்ஸ் விண்டு 78.32 -1.27

ஏஞ்சல் ஒன் 215.70 0.12

இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் 118.85 -1.40

மற்ற சில பங்குகளின் விலை விவரம்

பஜாஜ் பைனான்ஸ் 873.80 18.75

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் 974.00 55.80

மஹிந்திரா & மஹிந்திரா 3,029.00 97.90

என்.எல்.சி., இந்தியா 256.95 -2.55

என்.ஓ.சி.ஐ.எல்., 137.00 1.92

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us