ADDED : அக் 23, 2024 10:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மத்திய அரசு, புழுங்கல் அரிசி, உமி நீக்கப்பட்ட பழுப்பு அரிசி ஆகியவற்றுக்கு ஏற்றுமதி வரியில் இருந்து முழுவிலக்கு அளித்துள்ளது. சமீபத்தில் தான், இந்த வகை அரிசி ஏற்றுமதி வரியை 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.
ஜார்க்கண்ட், மகாராஷ்டிராவில் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் ஆணைய அனுமதி பெற்றே, இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாசுமதி, பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், அவற்றின் மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையும் அகற்றப்படுவதாக அரசு அறிவித்து உள்ளது.