தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ காற்றாலை இறக்கைகள் கையாளுவதில் துாத்துக்குடி துறைமுகம் 74.5% வளர்ச்சி

 காற்றாலை இறக்கைகள் கையாளுவதில் துாத்துக்குடி துறைமுகம் 74.5% வளர்ச்சி

 காற்றாலை இறக்கைகள் கையாளுவதில் துாத்துக்குடி துறைமுகம் 74.5% வளர்ச்சி


ADDED : செப் 30, 2026 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 01:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகம், காற்றாலை இறக்கைகள் மற்றும் உதிரிபாகங்கள் கையாளுவதில் 74.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இதுதொடர்பாக துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காற்றாலை இறக்கைகளை கையாள்வதில் துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதுடன், பெரிய அளவிலான பசுமை எரிசக்தி சரக்குகளை கையா ள்வதற்கான சிறப்பு உட்க ட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சரக்கு போக்குவரத்துக்கான முக்கிய தளவாட மையமாகவும், முக்கிய துறைமுகமாகவும் விளங்கி வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, துறைமுகத்தில் 2,188 காற்றாலை இறக்கைகள் கையாளப்பட்டுள்ளன. 2025 - 26 நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் 1,254 காற்றாலை இறக்கைகள் கையாளப்பட்ட நிலையில், தற்போது 74.5 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.இதே காலக்கட்டத்தில், துறைமுகத்தில் கையாளப்பட்ட காற்றாலை இறக்கை கப்பல்களின் எண்ணிக்கையும் 39-ல் இருந்து 52 ஆக அதிகரித்துள்ளது.இந்த வளர்ச்சி, துறைமுகத்தில் கையாளப்படும் காற்றாலை சார்ந்த சரக்குகளின் தொடர்ச்சியான அதிகரிப்பை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us