ADDED : ஜன 21, 2026 01:48 AM

புதுடில்லி: டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம், அர்பன் குரூசர் எபெல்லா என்ற தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் தடாஷி அசாஷுமா கூறியதாவது:
பேட்டரி கார்களுக்கான உண்மையான தேவை வந்துவிட்டதா என்பது குறித்த தெளிவு இன்னும் வரவில்லை.
எனவே, அடுத்த 3-4 ஆண்டுகளில், நாட்டிலுள்ள வாடிக்கையாளர்களின் பலதரப்பட்ட தேவைகளை உணர்ந்து, பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு, பேட்டரி ஆகியவற்றால் இயங்கும் கார்களையும், இரு வெவ்வேறு எரிபொருள்களை பயன்படுத்தும் ஹைபிரிட் கார்களையும் தயாரிக்க இருக்கிறோம்.
அவ்வகையில், தற்போது அர்பன் குரூசர் எபெல்லா என்ற முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளோம்.
ஒருமுறை சார்ஜ் செய்தால், 543 கி.மீ., வரை இந்த கார் ஓடும். உலகளவில் சுசூகி,- டொயோட்டா நிறுவனங்களிடையே ஒப்பந்தம் உள்ளது. அதன் அடிப்படையில் அர்பன் குரூசர் எபெல்லா எஸ்.யு.வி., கார்களை' 'சுசூகி மோட்டார் குஜராத்' நிறுவனத்திடமிருந்து நாங்கள் பெற்று, டொயோட்டா எனும் பிராண்ட் பெயரில் விற்பனை செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாருதி சுசூகி ஏற்கனவே இதே காரை, 'இ-விட்டாரா' என்ற பெயரில் அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

