'வர்த்தக ஒப்பந்த பேச்சு வெற்றிகரமாக முடிவடைந்தது'
'வர்த்தக ஒப்பந்த பேச்சு வெற்றிகரமாக முடிவடைந்தது'
ADDED : ஜன 27, 2026 01:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது என, மத்திய வர்த்தகத்துறை செயலர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
“கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுகள், வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த ஆவணங்களை சட்ட ரீதியாக சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது, இது முடிந்ததும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும்,” என அவர் கூறினார்.
இன்று நடைபெறும் இந்தியா - ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் முன்னிலையில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

