sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்


ADDED : நவ 04, 2024 10:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2024 10:27 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.ஐ.என்.எல்.,லுக்கு அரசு ரூ.1,650 கோடி நிதி


மத்திய ஸ்டீல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான, 'ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம்' எனப்படும் ஆர்.ஐ.என்.எல்., நிதிநிலையை மேம்படுத்த 1,650 கோடி ரூபாயை வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த செப்டம்பரில் பங்கு மூலதனமாக 500 கோடியும், செயல்பாட்டு மூலதனமாக 1,150 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆர்.ஐ.என்.எல்., நிறுவனத்தின் நிலைத்தன்மை குறித்து, எஸ்.பி.ஐ.,யின் துணை நிறுவனமான 'எஸ்.பி.ஐ., கேப்ஸ்' அறிக்கை தயாரிக்கவுள்ளது. ஆர்.ஐ.என்.எல்., நிறுவனத்துக்கு மொத்தம் கடன் நிலுவை 35,000 கோடி ரூபாயை தாண்டியுள்ள நிலையில், அதை தொடர்ந்து இயக்கத் தேவையான நடவடிக்கைகளில், மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

சோலார் அமைப்புக்கு இந்தியா மீண்டும் தலைமை


சர்வதேச சூரியமின்சக்தி கூட்டணியின் தலைமைப் பொறுப்புக்கு, இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்த கூட்டணியின் ஏழாவது பொதுக்குழு கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டமைப்புக்கு 2026 வரை இந்தியா தலைமை தாங்கவுள்ளதாக தெரிவித்தார்.

துணை தலைமை பதவிக்கு பிரான்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறிய அமைச்சர், சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியா அபரிமித வளர்ச்சி கண்டு வருவதை, சர்வதேச அமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்வதாக தெரிவித்தார்.

ஆப்ரிக்க மண்டலத்தில் இருந்து கானா, சீஷெல்ஸ் நாடுகளும் ஆசியா, ஆசிய பசிபிக் மண்டலத்துக்கு ஆஸ்திரேலியா, இலங்கை ஆகியவையும் துணைத் தலைமைக்கு தேர்வானதாகவும் பிரகலாத் ஜோஷி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us