ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள் / வர்த்தக துளிகள்
/
செய்திகள்
பொது
வர்த்தக துளிகள்
UPDATED : ஜூலை 28, 2025 01:03 AM
ADDED : ஜூலை 28, 2025 01:01 AM
UPDATED : ஜூலை 28, 2025 01:03 AM ADDED : ஜூலை 28, 2025 01:01 AM
நேபாள சமையல் எண்ணெய் இறக்குமதியை தடுக்க கோரிக்கை நேபாளத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்யின் வரி இல்லாத இறக்குமதியை மறுபரிசீலனை செய்யுமாறு, இந்திய தாவர எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதிக்கும் வகையில், நேபாள எண்ணெய்யின் வரியற்ற இறக்குமதி, வடக்கு மற்றும் வடகிழக்கு இந்திய சந்தைகளில் நிரம்பி வழிகின்றன. இது எண் ணெய் வித்துக்களுக்கான பண்ணை விலையையும் குறைக்கிறது. இதனால், நேபாளத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ரகங்கள் வரி இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதிப்பதை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், சமையல் எண்ணெய்க்கான நிலையான தரப்படுத்தப்பட்ட பேக்கேஜிங் அளவுகளை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.
'பாங்க்நெட்' ஏல தளத்துக்கு வங்கிகள் மத்தியில் வரவேற்பு பொ துத்துறை வங்கிகளின் புதுப்பிக்கப்பட்ட சொத்து மின் ஏல தளமான 'பாங்க்நெட்', வீடுகள் ஏலத்தை அதிகரித்து, நிலுவையை வங்கிகள் மீட்டெடுக்க, பெருமளவில் உதவிபுரிவதாக வங்கிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. கடனை செலுத்தாத வீடு, மனை சொத்துக்களை, வங்கிகள் தனித்தனியாக தங்கள் இணைய தளத்தில் ஏலம் விடுவதை வழக்கமாக கொண்டிருந்தன. அதன் பின், கடந்தாண்டு ஜூலை 1ம் தேதி, பொதுத் துறை வங்கிகள் இணைந்து துவங்கிய பாங்க்நெட் எனும் மின்னணு ஏல இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தளம் சொத்துக்களை பட்டியலிட்டு, ஏலம் விட சிறப்பாக உதவி வருவதாக, வங்கிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. மேலும், கடந்தாண்டு ஜூலை 1 முதல் நடப்பாண்டு ஜூன் 10ம் தேதி வரை நடத்தப்பட்ட 1.25 லட்சம் ஏலங்களில், 18,361 ஏலங்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன.
விமான சரக்கு போக்குவரத்து மறு பரிசோதனை விதிகள் தளர்வு இந்திய விமான நிலையங்களில், ஒரு விமானத்தில் இருந்து, பிற விமானத்துக்கு சரக்குகளை மாற்றும் போது, மறு பரிசோதனை கட்டாயம் என்ற விதிகள் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. இவ்விதிகள், உள்நாட்டு சரக்கு போக்குவரத்துக்கும் பொருந்தும். இதனால், விமான நிறுவனங்களுக்கு, தேவையற்ற செலவு மற்றும் நேர விரயம் ஏற்படும் நிலை இருந்து வந்தது. இதை தவிர்க்க, குறிப்பிட்ட சூழ்நிலைகளில், பாதுகாப்பு பரிசோதனை இன்றி சரக்குகளை பரிமாற்றம் செய்வதற்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு தற்போது தளர்த்தி உள்ளது. இதனால், வரும் 2030க்குள் விமானங்கள் வாயிலாக 10 மில்லியன் டன் அளவுக்கு சரக்குப் போக்குவரத்து எனும் இலக்கை எட்ட முடியும் என, சரக்கு விமானப் போக்குவரத்து துறையினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
வருமான வரி தாக்கல் படிவத்தில் முன்பேர வர்த்தகர்களுக்கு இடம் வருமான வரி தாக்கலுக்கான புதிய படிவத்தில், முதல்முறையாக சமூகவலைதள பிரபலங்கள், முன்பேர வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கு தொழில் குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. சொந்தமாக தொழில் அல்லது வணிகம் வாயிலாக வருமானம் ஈட்டும் தனிநபர்கள் வரி தாக்கல் செய்ய ஐ.டி.ஆர்., - 3 படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டு உள்ள அப்புதிய படிவத்தில், சமூக வலைதளத்தில் பிரபலங்கள், பங்குச்சந்தை முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுவோர், யூக வணிகத்தில் ஈடுபடுவோர், கமிஷன் முகவர் உள்ளிட்டோர் தொழில்முறை வல்லுனர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிதாக வளர்ந்து வரும் வேலைகளை சேர்ப்பதோடு, முறையான வரி தாக் கல் நடைமுறைகளை உறுதி செய்யும் நோக்குடன் அரசு இதை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், வரி வசூலை ஒருங்கிணைக்க முடியும் என அரசு எதிர்பார்க்கிறது.
வின்பாஸ்ட் கார் ஷோரூம் குஜராத்தில் துவக்கம் மின்சார கார் உற்பத்தியாளரான வியட்நாமின் வின்பாஸ்ட் நிறுவனம், குஜராத்தில் தன் முதல் கார் ஷோரூமை துவக்கியுள்ளது. வியட்நாமைச் சேர்ந்த மின் வாகன உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட் தமிழகத்தின் துாத்துக்குடியில் அதன் உற்பத்தி ஆலையை அமைத்து வருகிறது. இந்த ஆலையை துவங்குவதற்கு முன்பாக, நாடு முழுதும் இந்த ஆண்டு இறுதிக்குள் 27க்கும் மேற்பட்ட நகரங்களில் 35 டீலர்ஷிப்களை அறிமுகப்படுத்த இலக்கு வைத்துள்ளது. இம்மாதம் 15ம் தேதி, நிறுவனத்தின் பிரீமியம் மின்சார எஸ்.யு.வி., கார் மாடல்களான வி.எப்.6 மற்றும் வி.எப்.7க்கு முன்பதிவுகளை அதிகாரபூர்வமாக துவக்கியுள்ளது. இவ்வகை கார்களை காட்சிப்படுத்துவதற்கு வசதியாக, குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பிப்லாடில் 3,000 சதுர அடி பரப்பளவில் தன் முதல் ஷோரூமை திறந்துள்ளது.