
ஏ.சி.எம்.இ., சோலார் 450 மெகாவாட் மின் திட்டம்
ஏ .சி.எம்.இ., சோலார் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம், பொதுத்துறையைச் சேர்ந்த மின்சார உற்பத்தி நிறுவனமான எஸ்.ஜே.வி.என்., இடமிருந்து 450 மெகாவாட் திறன் கொண்ட, வினியோகத்துக்கு தயாரான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை பெற்றுள்ளது.
ஒரு யூனிட்டுக்கு 6.75 ரூபாய் என்ற அடிப்படையில் 25 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை பெற்றுள்ளதாக ஏ.சி.எம்.இ., தெரிவித்துள்ளது.
வினியோக தேவைகளை தடையின்றி பூர்த்தி செய்வதற்காக, இத்திட்டத்தில் 300 மெகாவாட் சூரிய சக்தியும், மீதமுள்ள தேவைக்கு பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'விவசாயிகள் நலனில்
சமரசம் செய்யப்படாது'
அ மெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பொருட்கள் துறையினரின் நலன் சமரசம் செய்யப்படாது என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியாவும், அமெரிக்காவும் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதித்து வருவதாகவும், நியாயமான, சரிசமமான வர்த்தக ஒப்பந்தத்தையே இந்தியா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் எப்போது வேண்டுமானாலும் நிறைவேறலாம் என்றும், அரசு எதற்கும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அமெரிக்க வரி விதிப்பால் மீன்வளத் துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யா போன்ற புதிய சந்தைகளை நோக்கி நகர்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

