
'ரேசர்பே' நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி
'ரே சர்பே' நிறுவனம், ரிசர்வ் வங்கியின் ஆப்லைன் பணப்பரிவர்த்தனைக்கான இடைத் தரகர் உரிமத்தை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் வாயிலாக, ஆன்லைன், எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் ஆப்லைன் என மூன்று முக்கிய வகை பரிவர்த்தனைகளுக்கான இடைத்தரகர் உரிமங்களையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த புதிய உரிமமானது, பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்த வழிவகுக்கும் என ரேசர்பே தெரிவித்துள்ளது.
******************
'பிக்கி' தமிழக தலைவராகவேலு மீண்டும் நியமனம்
'பி க்கி' தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவராக, வேலு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஐந்தாவது முறையாக இவர் தலைவராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 'ட்ரைவிட்ரான்' மற்றும் 'நியூபெர்க்' குழுமங்களின் தலைவரான இவர், மருத்துவ துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர். தமிழகத்தின் உற்பத்தி மற்றும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றுவது பெருமையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
'ஐரோப்பிய வரிச்சலுகை ரத்து இந்திய ஏற்றுமதியை பாதிக்கும்'
இ ந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான ஜி.எஸ்.பி., எனும் 'சிறப்பு வர்த்தக வரிச்சலுகைகளை', ஐரோப்பிய யூனியன் இம்மாதம் முதல் ரத்து செய்துள்ளது. இதனால் ஜவுளி, ரசாயனம் மற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட துறைகளின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என, ஜி.டி.ஆர்.ஐ., அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையால், இந்தியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகும் 87 சதவீத பொருட்களுக்கு, இனி முழுமையான இறக்குமதி வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் தோல் பொருட்கள் சார்ந்த 13 சதவீத ஏற்றுமதிக்கு மட்டுமே தொடர்ந்து சலுகை கிடைக்கும். ஜவுளி, இரும்பு, ஸ்டீல் மற்றும் மின்சாதனங்கள் போன்ற முக்கிய துறைகளுக்கான இந்த வரிச்சலுகை ரத்து, வரும் 2028 வரை அமலில் இருக்கும்.

