
'ரியாத் மெட்ரோ' விரிவாக்கம் ஆர்டரை பெற்றது எல் அண்டு டி.,
ச வுதி அரேபியாவின் ரியாத் மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கான ஆர்டரை, 'லார்சன் அண்டு டூப்ரோ' நிறுவனத்தின் ஹெவி சிவில் இன்ப்ராட்ரெக்சர் பிரிவு பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 5,000 - 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தில், 8.40 கி.மீ., தொலைவுக்கு சுரங்கம் மற்றும் மேம்பாலம் என ரயில் தடம் அமைக்கப்பட உள்ளது. மேலும், மெட்ரோ விரிவாக்க திட்டத்தின் கீழ், ஐந்து நவீன ரயில் நிலையங்கள் கட்டப்பட உள்ளன.
விமான நிலைய நவீனமயம் ஏ.ஏ.ஐ., ரூ.15,000 கோடி முதலீடு
நாடு முழுதும் விமான நிலையங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறை மற்றும் ரேடார் அமைப்புகளை நவீனப்படுத்துவதற்கு, வரும் 2028ம் ஆண்டுக்குள் 15,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக, இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் விபின் குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, பல்வேறு திட்டங்களுக்கான டெண்டரை விமான நிலைய ஆணையம் வெளியிட்டு இருப்பதாகவும், முதலீட்டை சொந்த நிதி ஆதாரங்கள் வாயிலாக திரட்ட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

