sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

வர்த்தக துளிகள்

/

வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்


UPDATED : பிப் 26, 2026 02:11 AM

ADDED : பிப் 26, 2026 01:09 AM

Google News

UPDATED : பிப் 26, 2026 02:11 AM ADDED : பிப் 26, 2026 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியா மீது சீனா புகார்


மி ன்சார வாகனங்கள், பேட்டரிகள் ஆகியவற்றின் உற்பத்திக்கு இந்தியா வழங்கிவரும் சலுகைத் திட்டங்களை எதிர்த்து, சீனா உலக வர்த்தக அமைப்பின் 'தகராறு தீர்வு அமைப்பிடம்' புகார் தெரிவித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், இவ்வாறு சலுகைகள் கொடுத் தால், வெளிநாட்டு நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், இது, உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு எதிராக உள்ளது எனவும் கூறி, சீனா புகார் தெரிவித்துள்ளது . சீனாவின் இந்த முடிவு வருத்தம் அளிப்பதாக இந்தியா கூறியுள்ளது.

Image 1541081

ஷாவ்மி மேல்முறையீடு


சீ ன மொபைல் தயாரிப்பு நிறுவனமான 'ஷாவ்மி' 655 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. 'குவால்காம்' போன்ற நிறுவனங்களின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஷாவ்மி பல்வேறு பொருள்களை தயாரிக்கிறது.

இதற்காக அந்நிறுவனங்களுக்கு 2 முதல் 5 சதவீதம் அளவுக்கு ராயல்டி தொகை செலுத்தியது. 'இறக்குமதி மதிப்புடன் இதனை சேர்த்து கணக்கு காட்டியிருக்க வேண்டும் எனவும், அவ்வாறு காட்டாததால் தயாரிப்புகளின் மதிப்பு குறைத்து காட்டப்பட்டு, வரி செலுத்தப்பட்டது' எனவும் வரி தீர்ப்பாயம் குற்றம் சாட்டியது.

இதையடுத்து ஷாவ்மி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கில் வழங்க இருக்கும் தீர்ப்பு, ஷாவ்மிக்கு எதிராக அமைந்துவிட்டால், ஒப்பந்த உற்பத்தி முறையில் இயங்கிவரும் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என, இத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜதிந்தர் மெஹ்ரா காலமானார்


நாட்டின் ஸ்டீல் மற்றும் உலோகத்துறை முன்னோடியும், 'எஸ்ஸார்' குழுமத்தின் உலோகங்கள் மற்றும் சுரங்கத்துறையின் துணைத்தலைவருமான ஜதிந்தர் மெஹ்ரா, செவ்வாயன்று தன் 86வது வயதில் காலமானார். ஸ்டீல் துறை யில் 60 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்ற மெஹ்ரா, அத்துறையின் ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவும் நேரடி அனுபவமும் மிக்கவர் என்று 'எஸ்ஸார்' குழுமம் குறிப்பிடப்பட்டுள்ளது. 'ஹஜிரா' ஸ்டீல் தொழிற்சாலை, ஒடிஷாவின் பாரதீப் ஸ்டீல் தொழிற்சாலை உள்ளிட்ட ஒருங்கிணைந்த -பெரிய திட்டங்களை மேம்படுத்துவதிலும் ஜதிந்தர் மெஹ்ரா முக்கியப் பங்காற்றியவர்.

Image 1541083

ரயில் பார்சலுக்கு செயலி


செ கந்திராபாத்தை தலைமையிடமாக கொண்ட தென் மத்திய ரயில்வே, நாட்டிலேயே முதன்முறையாக ரயில் பார்சல் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. புக்கிங், டிராக்கிங், டெலிவரி என இந்த ஆப் வாயிலாக, பார்சல் சம்பந்தமான அனைத்தையும் மேற்கொள்ளலாம். தொழில்துறையினர், தனிநபர்கள், சரக்கு போக்குவரத்து நிறுவனதாரர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து டிஜிட்டல் தளத்துக்கு கொண்டு செல்லும் முயற்சி இது என்று தெரிவித்துள்ளார், தென் மத்திய ரயில்வே பொதுமேலாளர் சஞ்சய் குமார் ஸ்ரீவஸ்தவா.






      Dinamalar
      Follow us