ADDED : ஏப் 04, 2026 01:00 AM

பவர் கிரிட் நிறுவனத்தின் புதிய தலைவர் பொறுப்பேற்பு
பொ துத்துறையை சேர்ந்த 'பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக புர்ரா வம்சி ராம மோகன் பொறுப்பேற்றுள்ளார். இதுவரை இவர், இந்நிறுவனத்தின் திட்ட இயக்குநராக பணியாற்றி வந்தார்.
பவர் கிரிட் இவர் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொறியியல் பட்டதாரியான வம்சி, திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கான பி.ஜி., டிப்ளமாக்கள் பெற்றுள்ளார். பவர் கிரிட் நிறுவனத்தில் 1993ஆம் ஆண்டு பயிற்சி அதிகாரிகளாக பணியில் சேர்ந்த முதல் குழுவை சேர்ந்தவர் இவர். மின்சார பரிமாற்றம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் 33 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவம் கொண்டவர். பிராந்திய மற்றும் கார்ப்பரேட் அளவில் பல முக்கிய தலைமை, கொள்கை வகுத்தல் பொறுப்புகளை வகித்துள்ளார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
௶'டி.வி.எஸ்., வேணு' குழுமம் வசமாகும்அமெரிக்க மியூச்சுவல் பண்டு
ஆ ட்டோமொபைல் துறை நிறுவனமான 'டி.வி.எஸ்., வேணு' குழுமம், அமெரிக்காவின் புருடென்ஷியல் குழுமத்தின், பி.ஜி.ஐ.எம்., இந்தியா என்ற சொத்து மேலாண்மை நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை கையகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.
டி.வி.எஸ்., வேணு மேனேஜ்மென்ட் அண்டு கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் வாயிலாக நடைபெற்ற இந்த ஒப்பந்தம், ஒழுங்குமுறை அனுமதிகள் மற்றும் பிற வழக்கமான முடிவு நிபந்தனைகளுக்கு உட்பட்டது. பி.ஜி.ஐ.எம்., இந்தியா நிறுவனத்தை கைப்பற்றுவதன் வாயிலாக மியூச்சுவல் பண்டு துறையில் டி.வி.எஸ்., வேணு குழுமம் களமிறங்க உள்ளது.
