ADDED : அக் 02, 2025 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ லுவலக பகிர்வு சேவைகளை அளித்து வரும் வீவொர்க் இந்தியா, 3,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட இன்று புதிய பங்கு வெளியீடுக்கு வர உள்ளது.
இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் விஜய் பன்சால் என்பவர் இந்நிறுவனத்தின் ஐ.பி.ஓ., விண்ணப்பத்தில், பல்வேறு தவறான தகவல்கள் இடம்பெற்று இருப்பதாகவும்; அதன் மீது நடவடிக்கை எடுக்க செபி தவறிவிட்டதாகவும் கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.
முழுமையான விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை, வீவொர்க் புதிய பங்கு வெளியீட்டை செபி நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.