ADDED : மே 24, 2025 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:தொடர் மழையால், மஞ்சள் விலை குவின்டாலுக்கு, 1,500 ரூபாய் வரை குறைந்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலர் சத்தியமூர்த்தி கூறியதாவது:
ஈரோட்டில் நான்கு இடங்களில் நடக்கும் ஏலத்துக்கு, புதிய மஞ்சள் வரத்து உள்ளது.
தற்போது மழை பெய்வதால் விலை சரிகிறது. கடந்த மாதம், தேவை அதிகரிப்பு, தரமான மஞ்சள் வரத்தால், விலை உயர்ந்து குவின்டால், 15,000 ரூபாய் வரை விற்றது.
தற்போது மஹாராஷ்டிர மஞ்சள், சந்தைக்கு வருகிறது. சில நாட்களாக தொடர் மழையால், புதிய மஞ்சள் வரத்தும், தரமும் சற்று குறைந்ததால் விலை சரிந்துள்ளது. நேற்று முன்தினம், 13,500 ரூபாய்க்கு அதிகபட்சமாக மஞ்சள் விலை போனது.
இவ்வாறு அவர் கூறினார்.