தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வேலையின்மை 4.90% ஆக குறைவு

 வேலையின்மை 4.90% ஆக குறைவு

 வேலையின்மை 4.90% ஆக குறைவு


ADDED : மார் 17, 2026 12:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 12:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நாட்டில் வேலையின்மை, கடந்த மாதம் 4.90 சதவீதமாக சற்றே குறைந்துள்ளது என, மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஜனவரி மாதத்தில் 5 சதவீதமாக இருந்தது.

பெண்களிடையே வேலையின்மை ஜனவரியில் 5.60 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 5.10 சதவீதமாக குறைந்துள்ளது. ஆண்கள் பிரிவில் வேலையின்மை 4.80 சதவீதமாக மாற்றமின்றி இருந்தது.

கடந்த மாதம் நாட்டின் நகர்ப்புறங்களில் வேலையின்மை 6.60 சதவீதமாகவும்; கிராமப்புறங்களில் 4.20 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. நகர்ப்புற வேலையின்மை கடந்த ஜனவரியில் 7 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த மாதம் முன்னேற்றம் கண்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us