ADDED : ஜன 27, 2026 01:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஜப்பானுக்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அந்நாட்டில் யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனை சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த ஐ.டி., நிறுவனமான என்.டி.டி., டேட்டா, நம் நாட்டின் தேசிய பண பரிவர்த்தனை கழகத்துடன் இணைந்து இந்த சேவையை சோதனை அடிப்படையில் துவங்கஉள்ளதாக கூறப்படுகிறது.
இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், இந்திய சுற்றுலா பயணியர் யு.பி.ஐ., செயலி வழியாக, ஜப்பான் வர்த்தகர்களின் க்யூ.ஆர்., குறியீட்டை பயன் படுத்தி, எளிதாக பணம் செலுத்தலாம்.

