தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ இன்டர்நெட் இல்லாமல் யு.பி.ஐ., பண பரிவர்த்தனை

 இன்டர்நெட் இல்லாமல் யு.பி.ஐ., பண பரிவர்த்தனை

 இன்டர்நெட் இல்லாமல் யு.பி.ஐ., பண பரிவர்த்தனை


ADDED : ஜூலை 22, 2026 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 01:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:இன்டர்நெட் மற்றும் மொபைல் சிக்னல் இல்லாத இடங்களிலும், 'என்.எப்.சி.' எனப்படும் அருகாமை தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் வாயிலாக யு.பி.ஐ.,யில் பணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

இந்த வசதியில், ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக 2, 000 ரூபாய் வரை செலுத்த அனுமதிக்கப்படலாம். இதற்கு, இன்டர்நெட் சேவை இருக்கும் போது 'யு.பி.ஐ. லைட்' கணக்கில் முன்கூட்டியே பணத்தை சேர்க்க வேண்டும். பின், செல்போனை கடையின் பணம் பெறும் கருவிக்கு அருகே காட்டி, இன்டர்நெட் அல்லது ரகசிய எண் இல்லாமல் பணம் செலுத்தலாம்.

தற்போதுள்ள '*99#' முறைக்கு மொ பைல் சிக்னலும், 'யு.பி.ஐ. 123 பே' வசதிக்கு தொலைபேசி அழைப்பும் அவசியம். புதிய 'என்.எப்.சி.' வசதியில், அலை பேசியை பணம் பெறும் கருவிக்கு அருகே காட்டினாலே போதும்; இன்டர்நெட், சிக்னல் அழைப்பு தேவையில்லை.

மேலும், இந்த வசதிக்கு ஏற்ற பணம் பெறும் கருவிகளை ஆய்வு செய்து, தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us