தமிழகத்தில் பேட்டரி சேமிப்புக்கு ஆர்டர் பெற்ற 'வாரீ ' குழுமம்
தமிழகத்தில் பேட்டரி சேமிப்புக்கு ஆர்டர் பெற்ற 'வாரீ ' குழுமம்
ADDED : நவ 27, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:சூரிய மின்சார தகடுகளை தயாரிக்கும் குஜராத்தின் வாரீ குழுமம், தமிழகத்தை சேர்ந்த அடிப்படை கட்டுமான நிறுவனம் ஒன்றின் பேட்டரி சேமிப்பு அமைப்புக்கான ஆர்டரை பெற்றுள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் வியூகப்பிரிவு தலைவர் அங்கித் தோஷி கூறுகையில், “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் மின் சேமிப்பு என்பது நவீன கட்டம் ஆகும். எனவே, நாங்கள் தொழில்நுட்பம், வடிவமைப்பு, நாட்டின் அதிகரிக்கும் தேவைக்கேற்ற மின்னாற்றல் உற்பத்தி ஆகியவற்றில் முதலீடு செய்கிறோம்” என்று தெரிவித்தார்.
வாரீ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 10 மெகாவாட் திறனுள்ள பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பை உருவாக்குவதற்கான ஆர்டரை தமிழக நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

