ADDED : மே 05, 2026 06:39 AM

புதுடில்லி: மறுசுழற்சி மற்றும் சுழற்சி பொருளாதாரத்திற்கு என ஒரு தனி ஆணையம் அல்லது தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என, இந்திய பொருட்கள் மறுசுழற்சி சங்கம் வலியுறுத்தி உள்ளது.
டில்லியில் நிடி ஆயோக் மற்றும் எம்.ஆர்.ஏ.ஐ., எனும் இந்திய பொருட்கள் மறுசுழற்சி சங்கம் இணைந்து நடத்திய கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் எம்.ஆர்.ஏ.ஐ., சங்கத்தின் தலைவர் சஞ்சய் மேத்தா கூறியதாவது:
தற்போது மறுசுழற்சி துறை பல அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு கட்டுப்பாட்டு அமைப்புகளின் கீழ் இயங்குகிறது. இதனால், மறுசுழற்சி துறைக்கான சிறந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க, தனி அமைச்சகம் அல்லது ஆணையம் உருவாக்கப்பட வேண்டும்.
இதனால், விரைவாக முடிவுகளை எடுப்பதோடு, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
