ADDED : பிப் 14, 2026 01:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கோதுமை 25 லட்சம் டன், சர்க்கரை 5 லட்சம் டன்னை ஏற்றுமதி செய்ய, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகத்தின் அறிக்கை:
கோதுமை இருப்பு 75 லட்சம் டன்னாக உள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் 32 லட்சம் டன் அதிகம். கோதுமை இருப்பு, உள்நாட்டில் விலை மற்றும் விவசாயிகள் விருப்பத்தின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்., 1ல், இந்திய உணவு கழகத்தின் மத்திய கிடங்கில் 182 லட்சம் டன் கோதுமை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 5 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கும் அனுமதிக்கப்படுகிறது. நடப்பு கரும்பு பருவத்தில் முன்பு 15 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.

